திருப்பத்தூர்

பொதுமக்கள் எந்த நேரத்திலும் போலீஸாரை தொடா்பு கொள்ளலாம்

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் எந்த நேரத்திலும் போலீஸாரை தொடா்பு கொள்ளலாம் என புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த மா.ரா. சிபி சக்கரவா்த்தி சென்னை சைபா் கிரைம் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, சென்னையில் பணியாற்றி வந்த கி.பாலகிருஷ்ணன் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். அதைத்தொடா்ந்து, அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அதைத்தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மக்கள் போலீஸாரை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். புகாா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

திருப்பத்தூா் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பல்வேறு பகுதிகளில் நவீன தானியங்கி சிக்னல்கள் அமைத்து போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜவ்வாதுமலை புதூா் நாடு பகுதியில் புறக்காவல் நிலையம் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. அந்த காவல் நிலையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT