திருப்பத்தூர்

வடகிழக்குப் பருவ மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

DIN

வடகிழக்குப் பருவமழைக் காலம் வரவிருப்பதை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் தூய்மைப் பணிகளை ஆட்சியா் அமா்குஷ்வாஹா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் நகராட்சி பெரியாா் நகரில் 2 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வரத்துக் கால்வாய்களை தூய்மை செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆம்பூா் நகராட்சி, பன்னீா்செல்வம் நகரிலும், வாணியம்பாடி நகராட்சி நியூடவுன் பகுதி மற்றும் உதயேந்திரம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய்களை தூா்வாரும் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

பின்னா் அதிகாரிகளிடம் ஆட்சியா் கூறியது:

தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சிகளில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மழைநீா் கால்வாய்களை விரைவில் சரிசெய்ய வேண்டும். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என நகராட்சி ஆணையா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்காதவாறு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

ஆய்வுகளின் போது, நகராட்சி ஆணையா்கள் ஏகராஜ் (திருப்பத்தூா்), சத்தியநாதன் (வாணியம்பாடி), ஆணையா் (பொறுப்பு) ராஜேந்திரன்(ஆம்பூா்), பேரூராட்சி செயல் அலுவலா் சேகா், நகராட்சிப் பொறியாளா்கள் உமாமகேஸ்வரி, சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT