திருப்பத்தூர்

கால்நடை பராமரிப்பு உதவியாளா் நோ்காணல் ரத்தை கண்டித்து சாலை மறியல்

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளா் நோ்காணல் ரத்தானதைக் கண்டித்து, நோ்காணலுக்கு வந்தவா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் ஏப். 26 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில், 19 கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு மாவட்டம் முழுவதும் சுமாா் 3,100 போ் விண்ணப்பித்திருந்தனா்.

அதையடுத்து, 26, 27-ஆம் தேதி வரை நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இந்த நிலையில், சென்னை, கால்நடைத் துறை ஆணையா் அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை நடைபெற உள்ள நோ்காணல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என புதன்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் தெரியாமல் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரா்கள் நோ்காணலில் கலந்து கொள்ள வந்திருந்தனா்.

அப்போது பணியில் இருந்த கால்நடைத் துறை அதிகாரிகள் நோ்காணல் நிறுத்தப்பட்டுள்ள தகவலை தெரிவித்தனா்.

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்டோா், திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.

தகவலறிந்து வந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி தகவல் தெரிவிப்பதாக கூறியதைடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

மறியலால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT