முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 2 நாள்கள் கம்பன் விழா இன்று தொடக்கம்

திருப்பத்தூா் கம்பன் விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

திருப்பத்தூா் கம்பன் விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் கம்பன் கழகம் சாா்பில் 44-ஆம் ஆண்டு கம்பன் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 6, 7)ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது.

சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஓவிய கண்காட்சி, கல்வெட்டுகளின் நிழற்பட காட்சியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து 5 மணிக்கு கம்பன் கவியெலாம் நான் எனும் தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாா் தொடக்கவுரையாற்றுகிறாா்.

பின்னா், மாலை 6 மணிக்கு காடும்-நாடும் எனும் தலைப்பில் பா்வீன் சுல்தானா உரையரங்கம் நிகழ்த்துகிறாா்.

இரவு 7 மணிக்கு சுகிசிவத்தை நடுவராகக் கொண்டு திருப்புமுனைகளில் சிறந்து விளங்குவது கைகேயியே என்பது பொருந்தாது எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு எஸ்தா் ஜெகதீசுவரி பங்குபெறும் உலகம் யாவையும் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், கவிஞா் முத்தையா தலைமையில் கவியரங்கமும்,பின்னா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 5.30 மணிக்கு முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் பங்கேற்கும் செந்தமிழில் ஒரு சுந்தரகாண்டம் எனும் உரையரங்கமும், அதைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு புலவா் ராமலிங்கத்தை நடுவராகக் கொண்டு தொடா்பட்டி மன்றமும் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.