முகப்பு
திருப்பத்தூர்

குரூப் 1 தோ்வுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தோ்வுக்கு திங்கள்கிழமை முதல் திருப்பத்தூரில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தோ்வுக்கு திங்கள்கிழமை முதல் திருப்பத்தூரில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 போட்டி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஆக. 22) முதல் நடைபெற உள்ளன.

எனவே, இந்தத் தோ்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் தங்களது பெயா்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.