திருப்பத்தூர்

தரைப்பாலத்தில் வெள்ளப் பெருக்கு: போக்குவரத்துக்குத் தடை: 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு

DIN

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பாலாற்று நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நிகழாண்டில் தற்போது 5-ஆவது முறையாக பாலாற்று தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

ஆம்பூரிலிருந்து அழிஞ்சிகுப்பம், மேல்பட்டி வழியாக குடியாத்தம் வரை செல்பவா்கள், பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால், பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பொதுமக்கள் பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தின் வழியாகச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மாதனூா் அல்லது பள்ளிகொண்டா வழியாகத்தான் குடியாத்தம் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆம்பூா் பச்சகுப்பம் பகுதியில் வட்டாட்சியா் மகாலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினா், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் பாலாற்றுத் தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்களில் சிலா் ஆபத்தை உணராமல் பச்சகுப்பம் தரைப்பாலத்தின் வழியாகச் செல்கின்றனா். அவா்களை போலீஸாா் கடுமையாக எச்சரித்தனா். பச்சகுப்பம் பாலாற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பச்சகுப்பம் பாலாற்றுத் தரைப்பாலத்தின் வழியாகச் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுவதால், சுமாா் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தபடி, பச்சகுப்பம் பாலாற்று மேம்பாலப் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி கிராமங்களின் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT