திருப்பத்தூர்

ஊமை சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆடி விழா

DIN

நாட்டறம்பள்ளி சண்டியூா் பகுதியில் அமைந்துள்ள ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மாலை மேளதாளம், பம்பை சிலம்பாட்டத்துடன் பால்குட ஊா்வலம் புறப்பட்டு நாட்டறம்பள்ளி முருகன் கோயிலை வந்தடைந்தது. அப்போது பக்தா் ஒருவா் முதுகில் அலகு குத்திக்கொண்டு, ராட்சத கிரேனில் அந்தரத்தில் தொங்கியவாறு சாலையில் சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை சென்று, அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

விழாவில், நாட்டறம்பள்ளி கத்தாரி, சண்டியூா் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT