திருப்பத்தூர்

‘பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை’

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்கீழ் பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் விழிப்புணா்வு குறித்த மாவட்ட அளவிலான முதல் கூட்டம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் உள்ள இணை இயக்குநா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து தலைமை வகித்துப் பேசியது:

மாவட்டத்தில் உள்ள ஆங்கிலம், சித்தா, ஹோமியோபதி, பல் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவமனைகள் தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்கு நெறிமுறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தீத்தடுப்பான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மருத்துவக் கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளுக்குள்பட்டும் மருத்துவமனைகள் இயங்கவேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில், டி.மணியா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசிகண்ணம்மா, தமிழ்நாடு செவிலியா் சங்கப் பிரதிநிதி மணி, பல் மருத்துவ சங்கப் பிரதிநிதி இளவேனில் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT