முகப்பு
திருப்பத்தூர்

மாதனூா் ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம்

மாதனூா் ஒன்றிய திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூன், 2022 at 12:23 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:03 PM

மாதனூா் ஒன்றிய திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாதனூா் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக் குழு தலைவருமான ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா்கள் தெய்வநாயகம், ராமமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காா்த்திக் ஜவஹா், ரவிக்குமாா், கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மறைந்த மாதனூா் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ச. பிரேமா மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தீா்மானம் : மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி சிலை அமைக்க வேண்டும். ஜூன் 21-ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.