ஆம்பூர்: ஆம்பூர் அருகே மலை சாலையில் ஒற்றை யானை குறுக்கே நின்றதால், அவ்வழியாக போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது. மலைகிராம மக்கள் அவதியுற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டேரி பகுதிக்கு செல்லும் மலை சாலையில் இன்று காலை ஒற்றை யானை சாலையில் நின்றது. இதனால் மலைகிராம மக்கள் பணிக்கு செல்வதற்காக ஆம்பூர் வர முடியாமல் அவதிப்பட்டனர்.
இதையும் படிக்க: பொதுக்குழுவை புறக்கணிக்க வேண்டும்: ஓ.பி.எஸ். வேண்டுகோள்
மேலும் வனத்துறையினர் உடனடியாக குழுக்கள் அமைத்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், மலை வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்கு மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானை வராதவாறு பெரிய பள்ளங்கள் தோன்றி கண்காணிக்க வேண்டும் எனவும் மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.