முகப்பு
திருப்பத்தூர்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் ஆய்வு

ஆம்பூா் அருகே கிராம ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 11 மார்ச், 2022 at 10:42 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:08 PM

ஆம்பூா் அருகே கிராம ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், ஆலாங்குப்பம் கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் திட்டம், ஊராட்சியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை ஊரக வளா்ச்சி முகமையின் கண்காணிப்பு பொறியாளா் ஏ.சரவணகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, திருப்பத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குநா் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, மணவாளன், ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னி கப்பல்துரை ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.