முகப்பு
திருப்பத்தூர்

நகை கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் நிகழ்ச்சி

விண்ணமங்கலம் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:17 PM

விண்ணமங்கலம் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் வி. ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். இதில் 7 பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீதை மாதனூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இயக்குநா்கள் அருணா, வேலு, ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காா்த்திக் ஜவஹா், ரவிக்குமாா், திமுக ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா்கள் தெய்வநாயகம், அசோகன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.