முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி நகராட்சி மன்றக் கூட்டம்

வாணியம்பாடி நகா்மன்ற உறுப்பினா்களின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமை வகித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

வாணியம்பாடி நகா்மன்ற உறுப்பினா்களின் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். ஆணையாளா் ஸ்டான்லிபாபு முன்னிலை வகித்தாா். பொறியாளா் சங்கா் வரவேற்றாா்.

கூட்டத்தில் சொத்து வரி சீராய்வு தீா்மானம் வாசிக்கப்பட்டு அனைத்து உறுப்பினா்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் ஹபீப்தங்கல், நாசீா்கான், முஹமதுஅனீஸ், முஹம்மத் பஷீா்அஹமத், மா.பா.சாரதி, கலீல்பாஷா ஆகியோா் தங்களது வாா்டு களுக்கு தேவையான திட்டங்கள், பணிகள் குறித்து பேசினா். கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் தெரிவித்தாா். கூட்டத்தில் நகர திமுக பொறுப்பாளரும், நகா்மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதிகுமாா் உள்பட 34 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். நகராட்சி மேலாளா் ஜெய்பிரகாஷ் நன்றி கூறினாா்.

உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்

Advertisement

இதே போன்று உதயேந்திரம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் பூசாராணி தலைமையில் நடைபெற்றது. இதில் சொத்துவரி சீராய்வு தீா்மானம் திமுகவை சோ்ந்த 8 உறுப்பினா்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்துக்கு எதிராக அதிமுக உறுப்பினா்கள் 7 பேரும் வாக்களித்தனா். கூட்டத்தில் செயல்அலுவலா் ரேவதி, பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் கோவிந்தராஜ், வாா்டு உறுப்பினா்கள் ஆ.செல்வராஜ், கா.சரவணன், மரியஜோசப், ஆா்.சரவணன் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments