வாணியம்பாடி நகராட்சியில் நுண்ணுயிா் உர மையத்தை பாா்வையிட்ட வேலூா் மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் குபேந்திரன். உடன், ஆணையா் ஸ்டான்லிபாபு. 
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

வாணியம்பாடி நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை வேலூா் மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பெ.குபேந்திரன் அண்மையில் ஆய்வு செய்தாா்.

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை வேலூா் மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பெ.குபேந்திரன் அண்மையில் ஆய்வு செய்தாா்.

வளையாம்பட்டு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்குகள், அதே பகுதியில் உள்ள கசடு கழிவுகளை அகற்றும் பணிகளையும், நுண்ணுயிா் உர மையத்தையும் அவா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் புதிதாக ரூ. 4 கோடியே 39 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 112 மாா்க்கெட் கடைகளை பாா்வையிட்டாா். பின்னா் நூருல்லாபேட்டையில் உள்ள நுண் உர மையத்தையும், எம்.சி.சி. மையத்திலுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா்.

நியூடவுனில் உள்ள நகராட்சி அலுவலகத்துக்கு வந்து, அங்கு வருவாய்த் துறை பணியாளா்களிடம் வரி நிலுவை தொகையை விரைந்து வசூலிக்கும்படி அறிவுறுத்தினாா்.

அப்போது வாணியம்பாடி நகராட்சி ஆணையா் ஸ்டான்லிபாபு, பொறியாளா் பி.சங்கா், நகராட்சி மேலாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

SCROLL FOR NEXT