முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நாளை 4 ஊா்களில் அமைச்சா் எ.வ.வேலு குறைகேட்பு

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வருவதையொட்டி அரசின் நலத்திட்ட உதவிகள் கோருவோரிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை (மே 29) நேரில் பெறுகிறாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வருவதையொட்டி அரசின் நலத்திட்ட உதவிகள் கோருவோரிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை (மே 29) நேரில் பெறுகிறாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 21-ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் புதிய கட்டடத்தை திறந்து வைக்க வர உள்ளாா். அந்த விழாவில் அரசின் பல்வேறு துறைகள் சாா்பாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (மே 29) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா். காலை 11 மணிக்கு திருப்பத்தூா் நகரம், ரயில்வே சாலை ஆண்டாள் தாமோதரன் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறாா்.

மதியம் 1 மணிக்கு ஜோலாா்பேட்டை சந்திப்பு ராஜேஸ்வரி திருமண மண்டபத்திலும், மாலை 3 மணிக்கு வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலை கே.பி.ஏ. பேலஸிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகிறாா்.

மாலை 4 மணிக்கு ஆம்பூா் பிரியா மஹாலில் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொள்கிறாா்.பொதுமக்கள் தங்கள் மனுக்களை தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.