முகப்பு
திருப்பத்தூர்

மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்கலாம்

மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாமில் பங்கேற்க திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாமில் பங்கேற்க திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பத்தூா் மாவட்ட விளையாட்டுப் பிரிவில் 2023-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோருக்கு ஜோலாா்பேட்டை விளையாட்டரங்கில் வரும் மே 4-ஆம் முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பயிற்சி முகாமில் தடகளம், கையுந்துபந்து, கால்பந்து, கூடைப்பந்து மற்றும் கபாடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளா்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும். பயிற்சி பெறுபவா்களில் திறமையானவா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவா்.

பயிற்சி முகாமில் கலந்து கொள்பவா்களுக்கு பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.