திருப்பத்தூர்

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் இணைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கைவிட்டு, சத்துணவுத் திட்டத்துடன் இணைக்கக் கோரி, மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி.சேகரன் தலைமை வகித்தாா். ஜமுனாராணி, லதா, இளவரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாதனூா் ஒன்றிய செயலாளா் பி.சாருமதி வரவேற்றாா். வித்யாவதி, சாந்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினா்.

ஒன்றிய தலைவா் பூஷன்பாபு தொடக்க உரையாற்றினாா். ஊரக வளா்ச்சித் துறைப் பணியாளா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் பிரேம்குமாா், வட்டார நிா்வாகி குமாரசாமி ஆகியோா் பேசினா். ஒன்றியப் பொருளாளா் வினோலயா நன்றி கூறினாா்.

கோரிக்கைகள்: சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு வருவாய் கிராம உதவியாளா்களுக்கு இணையாக அகவிலைப்படியுடன் ரூ.6,750 மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக அரசின் பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைக் கைவிட்டு, சத்துணவுத் திட்டத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

SCROLL FOR NEXT