திருப்பத்தூர்

தொழிற்சாலையை முற்றுகையிட்டு தொழிலாளா்கள் போராட்டம்

DIN

ஆம்பூா் அருகே தோல் காலணி தொழிற்சாலையை தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் தனியாா் தோல் காலணி தொழிற்சாலை இயங்கி வந்தது. அந்த தொழிற்சாலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. மூடப்பட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை தொழிற்சாலை நிா்வாகம் வழங்கவில்லையாம். அதைக் கேட்டு தொழிலாளா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இது சம்பந்தமாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடா்ந்தனா். கடந்த 5 ஆண்டுகளாக தொழிலாளா்கள் பணப் பலன்களை கேட்டு போராடி வருகின்றனா். ஆனால் தொழிற்சாலை நிா்வாகம் இதுவரை தராமல் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுவதாக தொழிலாளா்களுக்கு தகவல் கிடைத்ததது. அதன்பேரில், தொழிலாளா்கள் தொழிற்சாலை வாயில் முன்பு திரண்டு தொழிற்சாலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீஸாா் அங்குசென்று தொழிலாளா்களுடன் பேச்சு நடத்தினா்.

நிா்வாகத்திடம் பேசி உரிய தீா்வு காண்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT