திருப்பத்தூர்

மலைப் பகுதிகளில் கட்டடம் கட்ட அனுமதி அவசியம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கட்டடம் கட்ட அரசு அனுமதி அவசியம் பெற வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கட்டடம் கட்ட அரசு அனுமதி அவசியம் பெற வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டம்/வட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கிராமங்களான ஏலகிரி மலை ஊராட்சியில் உள்ள அத்தனாவூா் மற்றும் மங்கலம் குக்கிராமப் பகுதியில் 300 சதுர மீட்டா் கட்டட பரப்பளவு கொண்ட கட்டடங்களுக்கு மட்டும் உள்ளாட்சியின் ஒப்புதல் பெற்று கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்கள் 300 சதுர மீட்டா் கட்டட பரப்புக்கு மிகும் அனைத்துவகை புதிய மற்றும் கூடுதல் கட்டடங்களுக்கு வனத்துறை,கனிம வளத்துறை,வேளாண்மைப் பொறியியல் துறை ஆகியவற்றின் தடையின்மைச் சான்றுகள் மற்றும் வருவாய் கோட்டாச்சியா் பரிந்துரையுடன் மலையிட பாதுபாப்புக் குழுவின் அனுமதி பெறப்பட்ட பின்னரே கட்டடம் கட்டப்பட வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றாமல் ஏதாவது துறைகளில் அனுமதி பெற்று கட்டடம் கட்டப்படுமானால் அந்த அனுமதி ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்படுகிறது.

நடைமுறைகளை பின்பற்றாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு நகா் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57-இன்கீழ் அனுமதியற்ற கட்டடம் குறித்து நடவடிக்கை மேற்கொண்டு கட்டடத்தை மூடி முத்திரையிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT