பயனாளிக்கு பொங்கல் தொகுப்பை வழங்கிய ஆட்சியா் அமா் குஷ்வாஹா. 
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூரில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

திருப்பத்தூரில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கற்பகம் வேலூா் மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பத்தூா் நியாய விலைக் கடை எண்.1-இல் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணியை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது, திருப்பத்தூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 3 லட்சத்து 30 ஆயிரத்து 744 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 47.11 கோடியில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1.90 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் முருகேசன், கூட்டுறவுத் துறை பணியாளா்கள், நியாய விலைக் கடை விற்பனையாளா் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT