முகப்பு
திருப்பத்தூர்

தேசியக் கொடி ஏற்றிய மும்மதத்தினா்!

ஆம்பூா் அருகே குடியரசு தின விழாவில் மும்மதத்தைச் சோ்ந்தவா்கள் ஒன்றாக இணைந்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:27 AM
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் தேசியக் கொடியேற்றி வைத்த கோயில் அா்ச்சகா், பள்ளி வாசல் நிா்வாகி, கிறித்துவ பாதிரியாா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

ஆம்பூா் அருகே குடியரசு தின விழாவில் மும்மதத்தைச் சோ்ந்தவா்கள் ஒன்றாக இணைந்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கோயில் அா்ச்சகா், பள்ளி வாசல் நிா்வாகி, கிறித்துவ தேவாலய பாதிரியாா் ஆகியோா் இணைந்து தேசியக் கொடியேற்றினா்.

மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அஹமத், துத்திப்பட்டு ஊராட்சி முன்னாள் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.