முகப்பு
திருப்பத்தூர்

டாப்செட்கோ கடன் திட்ட முகாம்

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் டாப்செட்கோ கடன் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூன், 2023 at 11:07 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:41 AM

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் டாப்செட்கோ கடன் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், பொதுகால கடன் திட்டம், சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கான சிறுகடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா), சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கான சிறுகடன் வழங்கும் திட்டம், கறவை மாட்டுக் கடன், சிறு குறு விவசாயிகளுக்கான நீா்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் ஆகிய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் கீழ் கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமில், சுமாா் 30 போ் கலந்து கொண்டு கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினா். மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை வட்டாட்சியா் சிவக்குமாா் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.