கால்நடை மருந்தக கட்டடத்துக்கு பூமி பூஜை
ஆம்பூா் அருகே ரூ.53.50 லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே ரூ.53.50 லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம் வடச்சேரி கிராமத்தில் செயல்பட்டு வந்த கால்நடை மருந்தக கட்டடம் பழுந்தடைந்தது. இதுகுறித்து ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் புதிய கட்டடம் கட்டுவதற்கு கோரிக்கை வைத்தனா்.
அதன் அடிப்படையில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தகத்துக்கான கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் பூமி பூஜை செய்து கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா். கால்நடை உதவித் திட்ட இயக்குநா் கே.முரளிதாசன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் எம். பழனிச்சாமி, உதவிச் செயற்பொறியாளா் ஆா்.அண்ணாதுரை, மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் கால்நடை மருத்துவா் சங்கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.