முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே லாரி - பைக் மோதல்: இருவா் பலி

மாதனூா் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

Updated On : 10 மார்ச், 2023 at 11:09 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:12 PM

மாதனூா் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

வேலூா் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்தவா் பரத் (22), பாலிடெக்னிக் கல்லூரி மாணவா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி கௌதம் (25), பத்தாம் வகுப்பு மாணவா் யஸ்வந்த் (16) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் மாதனூரில் இருந்து ஒடுகத்தூா் பகுதிக்குச் சென்றாா்.

பாலூா் அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது.

Advertisement

இதில், பலத்த காயமடைந்த மூவரும் மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா். எனினும் பரத், கௌதம் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். யஷ்வந்த் தீவிர சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விபத்து குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.