திருப்பத்தூா் அருகே இருவா் தற்கொலை
திருப்பத்தூா் அருகே இருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
திருப்பத்தூா் அருகே இருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
திருப்பத்தூா் அடுத்த கதிரிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (26). இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், புதன்கிழமை இருவரிடையே ஏற்பட்ட தகராறில் வெங்கடேசன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாராம்.
இதேபோல், புதூா்நாடு மலை அடிவாரம், தெத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 30-ஆம் தேதி விஷம் அருந்து தற்கொலைக்கு முயன்றாா்.
அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த சம்பவங்கள் குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.