திருப்பத்தூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மற்றும் வேர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இப்போடியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், மரங்களை வளர்க்க வேண்டும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இப் போட்டியில் 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது இயற்கையை காப்போம், பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம், மாசில்லா மாவட்டத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்றடைந்தனர். இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.