ஆந்திர மாநிலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி அடுத்த தகரகுப்பம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வியாழக்கிழமை நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் தகரகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதிகாரிகள் வந்த வாகனத்தைப் பாா்த்தவுடன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபா் மூட்டையுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினாா்.
இதையடுத்து 2 மூட்டைகளில் இருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை இரு சக்கர வாகனத்துடன் வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.