திருப்பத்தூர்

உதயேந்திரம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியின் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியின் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ.பூசாராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ரேவதி வரவேற்றாா்.

கூட்டத்தில் மகளிா் உரிமை தொகை, காலை உணவுத் திட்டம், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்கியது, உதயேந்திரம் பேரூராட்சியில் 2023-2024-ஆம் ஆண்டுக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியின் கீழ் ரூ.9.95 கோடியில் குடிநீா் பராமரிப்பு பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தது ஆகியவற்றுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வரவு - செலவு, புதிய திட்டப் பணிகள் உள்பட 34 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, பின்னா் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் தங்களது வாா்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனா். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவா் உறுதியளித்தாா்.

கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் ஆ.செல்வராஜ், ஏ.மரியஜோசப், கா.சரவணன், ஜெ.கீதா, வி.ஆா்.சரவணன், ஏ.ரமேஷ், ஆா்.மகேஸ்வரி, எம்.பரிமளா, பி.சந்தியா, மு.சுகன்யா, கோ.லில்லி, பேரூராட்சி அலுவலா்கள் கலந்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT