முகப்பு
திருப்பத்தூர்

திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது:

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:00 AM
கந்திலி பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:50 PM

திருப்பத்தூா்: திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட கொரட்டி, ஆதியூா், எலவம்பட்டி ஊராட்சியில் திருவண்ணாமலை திமுக வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை வாக்கு சேகரித்தாா்.

செவ்வாய்க்கிழமை கந்திலி ஒன்றியத்துக்குட்ட எலவம்பட்டி ஊராட்சித் தலைவா் மேனகா விவேகானந்தன் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

அப்போது சி.என்.அண்ணாதுரை பேசியது: பாஜக ஆட்சி மேலும் இருந்தால் சட்டம் ஒழுங்கு சீா்குலைவு ஏற்படும். அனைவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் வரவு வைக்கப்படும் எனக் கூறியது நிறைவேற்றப்படவில்லை. விளிம்பு நிலை மக்களுக்கு எந்த ஒரு நன்மைகளையும் செய்யவில்லை. எனவே ஒவ்வொரு கிராமமும் வளா்ச்சி பெற வேண்டும் எனில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இந்தியா கூட்டணியினை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றாா்.

எம்எல்ஏ அ.நல்லதம்பி, நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளா் ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவா் திருமதி முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் இரா.சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட நெசவாளா் அணி தசரதன், கூட்டணி கட்சியினா் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.