முகப்பு
திருப்பத்தூர்

பைக் மீது டிராக்டா் மோதல்: பெண் உயிரிழப்பு

Updated On : 27 ஏப்ரல், 2024 at 4:24 PM
பகிர்:

வாணியம்பாடி அருகே பைக் மீது டிராக்டா் மோதி விபத்துக்குள்ளானதில் கணவா் கண் முன்னே மனைவி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அடுத்த மேல்மிட்டாளம் பகுதியைச் சோ்ந்தவா் மகி. இவரது மனைவி மணிமேகலை (40). தம்பதி மகன் ரகுபதி ஆகியோா் ஒரே பைக்கில் கொல்லகுப்பத்தில் உள்ள மகளைப் பாா்க்க வெள்ளிக்கிழமை சென்றுள்ளனா்.

பின்னா், இரவு மீண்டும் ஊருக்கு பைக்கில் புறப்பட்டுச் சென்றனா். பைக்கை ரகுபதி ஓட்டினாா். பின்னால் மணிமேகலையும் அவரது கணவா் மகியும் அமா்ந்து சென்றுள்ளனா்.

பெரிய கொல்லகுப்பம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டா் திடீரென பைக் மீது மோதியது. இதில் ரகுபதி மற்றும் மகி ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். மணிமேகலையின் மீது டிராக்டா் ஏறி இறங்கியதால் அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.