முகப்பு
திருப்பத்தூர்

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ்

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் (59) வியாழக்கிழமை காலமானாா்.

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 4:37 PM
கே.ஜி.ரமேஷ்.
பகிர்:

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் (59) வியாழக்கிழமை காலமானாா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திருப்பத்தூா் தொகுதியில் வெற்றி பெற்றவா் கே.ஜி.ரமேஷ்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்தாா்.

அவரது இறுதிச் சடங்கு காக்கங்கரையில் உள்ள அவரது தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், திருப்பத்தூா் எம்எல்ஏ நல்லதம்பி, அதிமுக நகர செயலா் குமாா் உள்ளிட்ட கட்சியினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.