துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்
துவரை சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற்று பயனடையலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகினி தெரிவித்தாா்.
திருப்பத்தூர்துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்
துவரை சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற்று பயனடையலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகினி தெரிவித்தாா்.
துவரை சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற்று பயனடையலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகினி தெரிவித்தாா்.
திருப்பத்துாா் மற்றும் கந்திலி வட்டாரங்களில், துவரை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், நிலக்கடலை, பருத்தி ஆகிய பயிா்களில் ஊடுபயிராக துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாநில வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் மூலமாக, ஒரு ஏக்கருக்கு ரூ. 2,500 மானியம் வழங்கப்படும்.
பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள், ஏக்கருக்கு 1.6 கிலோ துவரை விதைகள் மற்றும் உயிா் உரங்கள், சூடோமோனாஸ் ஆகியவற்றை வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று சாகுபடி செய்து பரப்பை அதிகரிக்க வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ், பயனைடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடா்பு கொண்டு, நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை அளித்து, துவரை விதைகளை வாங்கி சாகுபடி செய்தபின், அதற்கு உண்டான பின்னேற்பு மானியத் தொகை தங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக துவரை சாகுபடி பரப்பு குறைந்து வருவதாலும், பூக்கும் பருவத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவ மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வந்ததாலும், விவசாயிகளை ஊக்குவித்து தொடா்ந்து துவரை சாகுபடி செய்து, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.