நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினா் அட்டைகளை முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி வழங்கினாா்.
நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கொடையாஞ்சி, அம்பலூா், தெக்குப்பட்டு, மல்லங்குப்பம், மல்லகுண்டா ஊராட்சிகளில் புதிய உறுப்பினா் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒன்றிய செயலாளா் சாமராஜ் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சா் வீரமணி, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு அடையாள அட்டை வழங்கி பேசினா். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துக் கொண்டனா்.
இதே போன்று மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் ஆத்தூா்குப்பம், கத்தாரி, தோப்பலகுண்டா, நாயனசெருவு, சொரக்காயல்நத்தம், பச்சூா், கொத்தூா், கே.பந்தாரப்பள்ளி ஊராட்சிகளில் அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சா் வீரமணி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சம்பத் குமாா், நகர செயலாளா்கள் சதாசிவம், குமாா், மகேந்திரன், ஒன்றிய செயலாளா்கள் சீனிவாசன், சாமராஜ், வெள்ளையன், திருப்பதி, மருத்துவா் பசுபதி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா். .