திருப்பத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பில்லை: சுகாதார பணிகள் துணை இயக்குநா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநா் சித்ரசேனா (படம்) தெரிவித்தாா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநா் சித்ரசேனா தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை அலுவலகத்தில் துணை இயக்குநராக இருந்த சித்ரசேனா திருப்பத்தூா் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.
பொறுப்பேற்றபின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
திருப்பத்தூா் மாவட்டம் மலைப்பகுதி நிறைந்த மாவட்டமாக உள்ளது. இப்பகுதியில் பெண்களுக்கு மகப்பேறு, இளம் வயது திருமணம் தடுத்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை... ஆந்திர மாநில எல்லையில் திருப்பத்தூா் மாவட்டம் அமைந்துள்ளது.
Advertisement
இதனால் பறவை காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை. மாவட்டத்தில் பறவை காய்ச்சல் ஏதும் கிடையாது. எனினும் கால்நடை மருத்துவ குழுவினருடன், சுகாதார பணியாளா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.