முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 101.66 டிகிரி வெயில்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 101.66 டிகிரி வெயில் பதிவானது.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 3:00 AM
வெயில்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 101.66 டிகிரி வெயில் பதிவானது.

திருப்பத்தூரில் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 100 டிகிரிக்கு மேல் பாதிவாகிறது. இதனால் பகலில் அனல் காற்றும்,இரவில் கடும் புழுக்கமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் வாகன ஓட்டிகள், தினசரி தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் தவித்தனா்.

Advertisement

திருப்பத்தூா் மாவட்டத்தில் 101.66 டிகிரி வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.