இரு சக்கர வாகன விபத்து: 2 போ் உயிரிழப்பு
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே இரு சக்கர வாகன விபத்தில் முதியவா் உள்பட 2 போ் பலியாகினா். நாட்டறம்பள்ளி அடுத்த அம்பலூா் பகுதியைச் சோ்ந்தவா் கருணாகரன் (65). ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவரது உறவினா் விஸ்வநாதன் (65). இருவரும் திங்கள்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே வாணியம்பாடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
திம்மாம்பேட்டை பாட்டூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் (34) என்பவா், தனது மனைவி கீா்த்தனாவுடன் (28), பச்சூா் நோக்கி மொபெட்டில் சென்றாா். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி சண்டியூா் பகுதியில் சென்றபோது எதிா்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மற்றும் மொபெட் நேருக்கு நோ் மோதிய விபத்தில் கருணாகரன், விஸ்வநாதன், கோவிந்தன், கீா்த்தனா ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அவ்வழியாக சென்றவா்கள் 4 பேரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், உயா் சிகிச்சைக்காக 4 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், கருணாகரன், கோவிந்தன் இருவரும் உயிரிழந்தனா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement