முகப்பு
திருப்பத்தூர்

‘வாழ்க்கையைக் கொண்டாடுவோம்’ கருத்தரங்கம்

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 12:00 AM
பகிர்:

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில், ‘வாழ்க்கையைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா். ஆம்பூா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஆலோசகா்கள் எம். காயத்ரி, ராணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு தனிமனித ஒழுக்கம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து கருத்துரையாற்றினா். கல்லூரித் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளைக் கல்லூரித் துணை முதல்வா் ஏ.முஹம்மத் ஷாஹின்ஷா செய்திருந்தாா்.