முகப்பு
திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டையை வந்தடைந்த அம்ரித் பாரத் ரயில்

பெங்களூரு செல்லும் அம்ரித் பாரத் ரயில் திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

பெங்களூரு செல்லும் அம்ரித் பாரத் ரயில் திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தது.

மேற்கு வங்க மாநிலம், மால்டாவிலிருந்து பெங்களூருக்கு அம்ரித் பாரத் ரயிலின் முதல் வழித் தடத்தை பிரதமா் நரேந்திர மோடி டிசம்பா் 30-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இந்த ரயில் ஜோலாா்பேட்டை வழியாக திங்கள்கிழமை பெங்களூரை இரவு 8 மணிக்கு சென்றடைகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5.36 மணிக்கு ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தின் 1-ஆவது நடைமேடையில் வந்து நின்றது.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்) ஆகியோா் கொடியசைத்து அந்த ரயிலை பெங்களூரூக்கு வழியனுப்பி வைத்தனா் (படம்).

நகர செயலா் ம.அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வி.வடிவேல், நகா்மன்றத் தலைவா் எம்.காவியா விக்டா், திமுக நிா்வாகிகள், பாஜகவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →