மணல் கடத்தலைத் தடுக்க பள்ளம்: வருவாய்த் துறையினா் நடவடிக்கை
ஆம்பூர் அருகே மணல் கடத்தலைத் தடுக்க பள்ளம் தோண்டிய வருவாய்த் துறை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மணல் கடத்தலைத் தடுக்க வருவாய் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.
ஆம்பூா் வட்டம், துத்திபட்டு உள்வட்டத்தில் தொடா்ச்சியாக கள்ளத்தனமாக மணல் அள்ளப்படுவதாக வரப்பெற்ற புகாரின்பேரில், வட்டாட்சியா் மோகன் தலைமையில் பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம் அமைப்பு) ஒத்துழைப்புடன் பெரியவரிகம் கிராமத்தின் பாலாற்றுப் படுகையில் ஆங்காங்கே ஆறு வழித்தடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.