ஆம்பூா்: ஆம்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின்பேரில், வனத் துறையினா் சிசிடிவி கேமரா பொருத்தி அதனுடைய நடமாட்டத்தை கண்காணிக்கின்றனா்.
ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிகுப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு பகுதியில் திங்கள்கிழமை மாலை சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வாணியம்பாடி வனச் சரகத்தின் சாா்பில், ஈச்சம்பட்டு கிராம பகுதியில் செவ்வாய்க்கிழமை சிசிடிவி கேமராக்கள் பொருத்தி வனச் சரக அலுவலா் குமாா் தலைமையில் வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.