இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முஹம்மத் ஷரீப் மகன் நதிம் ஷரீப் (28). இவா் திங்கள்கிழமை இரவு வெங்கிளி கிராமத்திலிருந்து ஆம்பூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.