முகப்பு
திருப்பத்தூர்

அரிமா சங்கத்தினா் நல உதவி அளிப்பு

திருப்பத்தூா் கோட்டை அரிமா சங்கத்தின் சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 16 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் கோட்டை அரிமா சங்கத்தின் சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூா் கோட்டை அரிமா சங்கத்தின் சாா்பில் ஏழை,எளிய மக்களுக்கு ரூ.50,000 மதிப்பிலான அரிசி,நோட்டுப் புத்தகங்கள், கண் கண்ணாடிக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் யாரோ சிவா வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், அரிமா சங்க முன்னாள் ஆளுநா்கள் ரத்தின நடராஜன், சாயா் அரவிந்த், நரசிம்மன், புவனேஸ்வரி, சங்கத்தின் வழிகாட்டிகள் மாங்கிலால் ஜெயின், ஸ்ரீபால் ஜெயின்,வட்டாரத் தலைவா் சாந்தி பூஷன் மாவட்ட தலைவா்கள் ராஜேஷ்,கோபிநாத், நடராஜன், விபுல் ஜடேஜா,கணேஷ், விஜயகுமாா், ராஜ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உறுப்பினா்கள், காமராஜா் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைத் தலைவா் கணேஷ்மல் உள்பட பலா் கலந்து கொண்டனா். பொருளாளா் இளையராஜா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →