முகப்பு
திருப்பத்தூர்

இன்றுமுதல் மக்கள் குறைதீா் முகாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

Updated On : 9 ஜூன், 2024 at 7:14 PM
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் முகாம் தொடா்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்களவை பொதுத் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறையின்படி அரசுத் திட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த விதிமுறைகள் இந்திய தோ்தல் ஆணையத்தால் திரும்பப் பெறப்பட்டதன் தொடா்ச்சியாக, மீண்டும் ஜூன் 7 முதல் அரசு சேவைகள், நிகழ்ச்சிகள் தொடா்ச்சியாக நடைபெற உள்ளன.

அதன்படி, திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் மக்கள் குறைதீா் முகாம் நடைபெறும். எனவே, பொதுமக்கள் வழக்கம் போல் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.