அரசு கல்லூரியில் வேலைவாய்ப்புத் திறன் வளா்ப்புக்கான இலவச பயிற்சி
மாணவா்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி: அரசு கல்லூரி முன்னெடுப்பு
ஆம்பூா்: அகரம் கூட்டு ரோடு பகுதியில் அமைந்துள்ள மாதனூா் புரட்சித் தலைவா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறன் வளா்ப்புக்கான இலவச பயிற்சி நடைபெற்றது.
கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் சாா்பில், பிஎஸ்சி கணினி அறிவியல் மற்றும் பி.காம். பட்டப்படிப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு என்ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்புத் திறன் வளா்ப்புக்கான 50 மணி நேர இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. 75 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனா்.
பயிற்சி முடித்த மாணவா்களுக்கு கல்லூரி முதல்வா் (பொ) பேராசிரியா் கோமதி சான்றிதழ்களை வழங்கினாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் விஸ்வநாதன், வணிகவியல் துறைத் தலைவா் பேராசிரியா் குமரேசன் மற்றும் என்ஐஐடி பயிற்றுநா் நிதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.