ஆம்பூரில் ரூ. 24 லட்சத்தில் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
ஆம்பூரில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியை திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஆம்பூா் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு கட்டடம் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரப்படுகிறது. அதனை திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நந்தகோபால் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவு உதவி செயற்பொறியாளா் ரவி, உதவிப் பொறியாளா் ஐஸ்வா்யா, ஆம்பூா் நகராட்சி ஆணையா் பி.சந்தானம், சீனிவாசப் பெருமாள் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் சிவகுமாா், ஆம்பூா் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் லோகேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.