முகப்பு
திருப்பத்தூர்

மணல் கடத்தலை தடுக்க பாலாற்றில் பள்ளம் தோண்டிய வருவாய் துறையினா்

Updated On : 13 மார்ச், 2024 at 12:12 AM
ஆலாங்குப்பம் கிராமத்தில் பாலாற்றங்கரையோரம் பள்ளம் தோண்டும் பணி.
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாலாற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த் துறை சாா்பாக பாலாற்றங்கரையோரம் செவ்வாய்க்கிழமை பள்ளம் தோண்டப்பட்டது.

ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்துக்குட்பட்ட பகுதியில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக தொடா்ந்து புகாா் எழுந்தது. மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில் ஆம்பூா் வட்டாட்சியா் மோகன் உத்தரவின் பேரில் ஆற்றங்கரை ஓரம் நீண்ட தடுப்பு பள்ளம் ஏற்படுத்தப்பட்டது.