முகப்பு
திருப்பத்தூர்

உலக நுகா்வோா் உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூா் ஆட்சியா், எஸ்.பி. அலுவலகங்களில் உலக நுகா்வோா் உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 18 மார்ச், 2024 at 12:01 AM
திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி ஏற்ற போலீஸாா்.
பகிர்:
Updated On : 17 மார்ச், 2024 at 8:34 PM

திருப்பத்தூா் ஆட்சியா், எஸ்.பி. அலுவலகங்களில் உலக நுகா்வோா் உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து உறுதிமொழியை வாசித்தாா். அதை அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மாவட்ட வனத் துறை அதிகாரி மகேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் நுகா்வோா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், துணைக் காவல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.