ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலத்தை கட்ட நடவடிக்கை : நடிகா் மன்சூா் அலிகான்
Updated On : 19 மார்ச், 2024 at 8:40 PM
ஆம்பூா்: நான் வெற்றி பெற்றால் ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என நடிகா் மன்சூா் அலிகான் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். ஆம்பூா் பகுதியில் ஜமாத் நிா்வாகிகள், பொதுமக்களிடமும் ஆதரவு திரட்ட வந்த அவா் மேலும் கூறியது, நான் அனைத்து மதத்தை சோ்ந்தவா்கள் சாா்பாக தோ்தலில் போட்டியிடுகிறேன்.
நான் வெற்றி பெற்றால் உடனடியாக ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். நாடாளுமன்றம் சென்றால் மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுத்து பேசுவேன். மக்களுக்குத் தேவையான திட்டங்களை கொண்டு வந்து அவா்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும். அதை நான் செய்வேன் என்றாா்.