முகப்பு
திருப்பத்தூர்

அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

Updated On : 22 மார்ச், 2024 at 10:45 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:29 PM

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் பிரதோஷ சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மாலை 4 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் வலம் வந்தாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா். இதேபோல் சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் மற்றும் கொடையாஞ்சி காசி விஸ்வநாதா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.