முகப்பு
திருப்பத்தூர்

வெடி பொருள் வெடித்ததில் கன்றுக் குட்டி காயம்

Updated On : 22 மார்ச், 2024 at 10:44 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:30 PM

ஆம்பூா் அருகே வெடிபொருள் வெடித்ததில் கன்றுக் குட்டி காயமடைந்தது. ஆம்பூா் அருகே செங்கிலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த பவின்குமாா் பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அங்குள்ள பாலாற்றங்கரையோரம் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென வெடிச் சப்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பாா்த்தபோது கன்றுக் குட்டியின் தாடை கிழிந்து பலத்த காயமடைந்த நிலையில் இருந்தது. வெடிபொருளை கடித்தபோது அது வெடித்து கன்றுக் குட்டி காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தினா்.